top of page

விருதுநகரின் பாரம்பரியம், தலைமுறைகள் போற்றும் ஆரோக்கியம்.

எங்களது நிறுவனம்

A1382 விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலை லிமிடெட், விருதுநகர்* என்பது தமிழ்நாடு அரசின் சார்பு நிறுவனமாகும்.

இந்நிறுவனம் 1937ஆம் ஆண்டு கூட்டுறவுப் பண்டகசாலையாகத் தொடங்கப்பட்டு, பின்னர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலையாக மாற்றப்பட்டு, தற்போது விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவின் தலைமைச் சங்கமாகச் செயல்பட்டு வருகிறது.

 

எங்களது வணிகப் பிரிவுகள் மற்றும் சேவைகள்:

1. தமிழ்நாடு அரசின் *பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்* தொடர்பான உணவுப் பொருட்களின் கொள்முதல், இருப்பு மற்றும் விநியோகப் பணிகள்.


2. தமிழ்நாடு அரசின் *முதல்வர் மருந்தகம்* திட்டத்திற்கான மாவட்ட மையக் கிடங்கு செயல்பாடுகள்.


3. தமிழ்நாடு அரசின் *அரசு மாணவர் விடுதிகளுக்கு* தேவையான உணவுப் பொருட்களை வழங்கும் பணிகள்.


4. தமிழ்நாடு அரசின் *இந்து சமய அறநிலையத் துறை* திருக்கோவில்களின் அன்னதானத் திட்டம் மற்றும் *அம்மா உணவகங்களுக்கு* தேவையான உணவுப் பொருட்களை வழங்கும் பணிகள்.


5. விருதுநகர் மாவட்டத்திலுள்ள *அரசுத் துறைகளுக்கு* தேவையான எழுதுபொருட்களை வழங்கும் பணிகள்.


6. பொதுமக்களுக்கான *சுயசேவை பல்பொருள் அங்காடி (Super Market)* செயல்பாடு.


7. *நியாய விலைக் கடைகள்* மூலம் பொதுவிநியோகத் திட்டப் பணிகளை மேற்கொள்வது.


8. பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில் "சிறுதானியங்கள்",விற்பனை செய்தல்.

மேலும், "விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, சாத்தூர், சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டை" வட்டாரங்களில் உள்ள பொதுவிநியோகத் திட்ட நியாய விலைக் கடைகளுக்கு தேவையான உணவுப் பொருட்களை பாதுகாப்பாக சேமித்து, முறையாக விநியோகம் செய்யும் பணிகளையும் எங்களது நிறுவனம் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

ChatGPT Image Jul 26, 2026, 05_03_45 PM.png
bottom of page